
போலந்து, மார்ச் 01
யுத்தம் காரணமாக உக்ரைனில் நிர்க்கதியாகியுள்ள ஆறு இலங்கையர்கள் போலந்தை வந்தடைந்துள்ளனர் என அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களுள், இலங்கை செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மாணவி ஒருவரை, இன்று நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக, உக்ரைனின் நிலைமை அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து தரை மார்க்கமாக 37 இலங்கையர்கள் போலந்தை வந்தடைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், உக்ரைன் நாட்டவர்கள் உட்பட பெருமளவான வெளிநாட்டவர்கள், போலந்துக்கு பயணிக்கும் எதிர்பார்ப்பில் உள்ளமையால், எல்லை சோதனைச் சாவடிகளில், நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிவதாக போலந்தில் உள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்துள்ளார்.





