
கொழும்பு, மார்ச் 01
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின்படி, 2024 ஆம் ஆண்டு இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
கையகப்படுத்தப்பட்டுள்ள 90 சதவீத காணிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதுவும் விரைவில் நிறைவடையும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.





