கீவ்வில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்!

<!–

கீவ்வில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்! – Athavan News

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குபகுதிக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகம் மேற்படி வலியுறுத்தியுள்ளது.

மேற்கு பதிகள் பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதாகவும், அங்கு அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply