உக்ரைன் பிரச்சினை : இந்தியர்களை மீட்கும் 9ஆவது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது!

<!–

உக்ரைன் பிரச்சினை : இந்தியர்களை மீட்கும் 9ஆவது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது! – Athavan News

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 218 இந்தியர்களுடன், ஒன்பதாவது விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 216 இந்தியர்களுடன் 8 ஆது விமானம் ஹங்கேரியின் புடா பெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு இருந்த நிலையில், தற்போது 9ஆவது விமானமும் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply