
கொழும்பு, மார்ச் 01
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொரோனா வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபர ரீதியாக கொரோனா தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





