24 மணி நேரமும் சிவனை நினைக்கும் நாள் இன்று – சிவராத்திரி

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் சோதி வடிவான சிவபெருமானுக்குரிய விரதமாக சிவராத்திரி திகழ்கிறது.அத்துடன் சைவ சமயத்தினருக்கு பெரும் சிறப்பான விரதமாகும் . பன்னெடுங்காலமாக நம்நாட்டில் மேற் கொள்ளப்பட்டுவரும் விரதமாகும் . சைவ மக்கள் அனைவரும் கடைப்பி டிக்க வேண்டிய விரதமுமாகும் . சிவத்துடன் சம்பந்தப்படும் இராத்திரி சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது.

சிவனுக்குரிய பலகோடி நாமங்களில் தலைசிறந்த நாமம் சிவன் என்பதாகும் . சிவன் என்ற சொல்லுக்கு பேரின் பத்துக்குக் காரணன் என்றும் தூயதன் மையன் என்றும் பொருள் காண்பர் ஆன்றோர்கள். ` சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடி னும் இல்லை . அவனோடு ஒப்பார் இங்கு யாரும் மில்லார் ‘ என்பது திருமூலர் திருமந்திரமாகும் .

அன்பு தான் சிவம் ! சிவம்தான் அன்பு ; அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலாதவர்களாவர் என்றும் கூறி யுள்ளார் .விரதங்களும் பலவாயின . சிவ பெருமானுக்குரிய விரதங்கள் எட்டு . அவற்றுள் சிவ ராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு மிகுந்தது .

எல்லா விரதங்களையும் விட பல மடங்கு சிறந்தது . விரதத் தின் மகிமை சொல்லி அடங்காது . புற இருளைப் போக்கிக் கொள்வதற்கு சூரியஒளி உத வுவது போல அக இருளைப் போக்கிக் கொள்ள நமக்கு உதவுவது சிவ ஒளியாகும்.

சிவ வழிபாடு செய்வதால் முற்பிறப்பில் செய்த வினைகள் இப்பிறப்பில் அழிந்து விடும் . சிவராத்திரி விரதம் மாசிமாதத்தில்வரும் தேய் பிறைக் காலமாகிய அபர பட்சத்தில் பதினான்காம் நாள் இரவு சதுர்த்தசிகூடிய தினத்தில் அனுஷ்ட்டிக்கப் பட்டு வருகின்றது .

இந்த விரதம் பற்றிய பல வரலாற்று உண்மைகள் உள்ளன . பிரமனும் திருமாலும் நான் பிரமம் , நான் பிரமம் என்று தருக்கமிட்டுப் போர் புரிந்தனர் . அந்த வேளையில் எம்பெருமான் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார் . இந்த ஒளிப்பிழப்பின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என்னும் அசரீரி ஒலி எழுந்தது . பன்றி உருவெடுத்து திருமால் மண்ணிடைப்புக, அன்னப் பறவை உருவெடுத்து பிரமா விண்ணை நோக்கிப் பறந் தார்.

அடிமுடி தேடுவதில் இருவரும் முனைப்பாகத் தேடி யும் கண்டிலர் . தம் ஆற்றாமையை உணர்ந்தனர். இறை வன் அருஉருவத் திருமேனியாகிய இலிங்கோற்பவ வடிவில் காட்சி கொடுத்து அவர்களின் அகந்தையைக் களைந்தார் .இவ்வாறு பலர் அற்புதங்களை கொண்டது இந்த சிவராத்திரி விரதமாகும்.

Community Verified icon

Leave a Reply