
கொழும்பு, மார்ச் 01
1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை 8 மாதங்களுக்குத் தேவையான இந்த பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





