சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, உலக சைவப் போரவையின் இலங்கை கிளை, நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்திருந்த கொடி தின வைபவம், கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நிகழ்வுகள் உலக சைவப் பேரவையின் இலங் கைக்கிளை தலைவர் கா.தயாபாரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார் கொடி விநியோகத்தை ஆரம்பித்தார் வைத்தார்.
நிகழ்வில் பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, இந்து சமய அலுவலுகள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமா மகேஸ்வரன், மாணிக்கப்பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபை தலைவர் அ. மாணிக்க வாசகர், உலக சைய பேரவையின் அங்கத்தவர்களும் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.







