பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

2021 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹெக்டேருக்கு 50,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை உருவாக்க அமைச்சரவை முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, உயர்ந்தபட்ச அளவாக 5 ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்காக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply