அருட்தந்தை…

அருட்தந்தை நிதிதாசன் வாகனவிபத்தில் உயிரிழப்பு!

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அருட்தந்தை நிதிதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

EP CAN-7158 என்ற இலக்க பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply