மூதூர் Global wisdom சர்வதேச பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் ,புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூதூர் அந்நகார் மகளீர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்தோடு நாட்டின் தற்போதைய விலையேற்றத்தினால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை மாணவர்கள் நாடகம் மூலமாக நடித்துக் காட்டியதையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்து சிறப்பித்தார்.







