இலங்கை விடயம் ஐ.நாவில் இன்னமும் முக்கிய கவனிப்பில் – சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

இலங்கை விடயம் ஐ.நாவில் இன்னமும் முக்கிய கவனிப்பிலேயே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் கலந்து கொண்டு ,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு இடங்களில்,பயங்கரவாத தடைச் சட்டத் துக்கு எதிராக ,கைலயெழுத்து சேகரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றனர்.தெற்கிலும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பலர் எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சர்வதேச அழுத்தும் தொடர்ச்சியாக இப்போது இருக்கிறது ஆகவே அரசாங்கம் இப்போதாவது இதனை செவிமடுக்க வேண்டும்.

இப்போது பலர் இந்த சட்டத்தின் கொடூரம் தெரிந்து குரல் கொடுத்து வருகின்றனர்.கடந்த 10 வருடங்களை எடுத்துக் கொண்டால்,ஐ நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான நிலைமை இன்னமும் தணியவில்லை என்று கூறலாம்.ஐ நா உயர்ஸ்தானிகரிடமும் இருந்து இலங்கை தொடர்பில் மிக அறிக்கை ஒன்று வந்துள்ளது.

3 ஆம் திகதி இது பேரவையில் எடுத்துக்கொள்ளப்படும்.ஆகவே இம்முறையும் பேரவையில் இலங்கை விடயம் எடுத்துக்கொள்ளப்படும்.உக்ரைன் ரஷ்ஷியா போர் நடைபெற்றுவருகிறது. ஐ.நா இதற்கும் நடவடிக்கை வேண்டும். எந்தவொரு சந்திப்பதிலும் இலங்கை விவகாரம் ஐநாவில் தணியாது என்றார்

Leave a Reply