விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசாங்கம் முடிவு

கொழும்பு, மார்ச் 01

2021ஆம் ஆண்டு, 2022 ஆம் ஆண்டுக்கான பெரும் போகத்தில் நெல் அறுவடை குறைவினால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 25 வீதம் இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை உருவாக்க அமைச்சரவை முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, உயர்ந்தபட்ச அளவாக 5 ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்காக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன், மதிப்பீட்டு ஊக்கத் தொகையொன்றையும் மற்றும் இழப்பீட்டுத் தொகையையும் வாழ்வாதார அளவில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடைமுறை திட்டமொன்றும் உருவாக்கப்பட்டது.

Leave a Reply