
யாழ். திருநெல்வேலி – வீரகட்டி விநாயகர் கோவிலில் பக்தர்கள் நான்கு பேருடைய தங்கச் சங்கிலிகளை திருடிய குற்றச்சாட்டில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 9 பெண்கள் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த 9 பெண்களும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்களிடம் இருந்து 04 தங்கச் சங்கிலிகள் (08 பவுன்) கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிட்தக்கது.





