யாழில் கடற்சங்குகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை பகுதியில் சட்டவிரோதமாக கடற்சங்குகளை வைத்திருந்த 67 வயதுடைய நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 160 கடற்சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply