நடுவீதியில் நிற்கும் வாகனங்கள் – கயிறு கட்டி இழுக்கும் நிலை!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் சமூகம் மீடியாவுக்கு சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்:

இன்று யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய நிலை இவ்வாறு உள்ளது.

இந்த ஒரு வார காலமாக வாகனங்களை கட்டி இழுத்து வந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிட்டளவே டீசல் வழங்கப்படுகிறது.

குறைந்தது ஒரு மணித்தியாலமாவது தேவைப்படுகிறது எரிபொருள் நிரப்புவதற்கு. வெளிமாவட்டத்திலிருந்து இங்கு தேவை நிமித்தம் பொருட்களை இறக்குவதற்கு வந்தோம்.

திரும்பி செல்வதற்கு டீசல் இல்லை. காலை இங்கே வந்தால் சாப்பிடும் நேரத்துக்கு கூட வீடு திரும்ப முடியாமல் உள்ளது. ஏ9 வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் தீர்ந்து விட்டது.

இப்படி உள்ளூர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் உள்ளது என நம்பி பலர் இங்கே வருகின்றனர் என கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply