நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற இருவரை காணவில்லை!

வெல்லவாய – எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதான இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply