எல்லேவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

வெல்லவாய – எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்று காணாமல் போயிருந்த இரு இளைஞர்கள் இன்று பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிடஇ ஏழு பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று சென்றுள்ளனர்.

குறித்த இடத்தில் நீராடச் சென்ற போதே இந்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல மணி நேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்கு பின் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 21 வயதுடைய இளைஞன் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் என்பதுடன் மற்றைய இளைஞன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply