வட்டவளை – மௌன்ஜீன் தோட்டத்திலுள்ள மலைத்தொடரில் தீ பரவல்

வட்டவளை – மௌன்ஜீன் தோட்டத்தில் அமைந்துள்ள மலைத்தொடரில் தீபரவல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வட்டவளை பொலிசாரர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்து வருவதாக அத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்று காலை முதல் மாலை வரை சற்று உஸ்னமான காலநிலை தோன்றியுள்ளதால் தீயை அணைக்க தோட்ட மக்களின் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் வட்டவளை பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தீ வைத்த சந்தேக நபர்களை தேடி கைது செய்ய உள்ளதாக கூறி விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

இனந்தெரியாதோரால் குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply