சிங்கப்பூரில் பதக்கங்கள் வென்ற இலங்கை வீரர்கள்

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் சர்வதேச எடைத்தூக்கல் போட்டியில் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இலங்கை வீரர் உஷான் சாருக்க இலங்கைக்கான 3 ஆவது தங்கத்தை பெற்றக்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு 4 தங்கம் , 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் உட்பட மொத்தமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது.

அத்துடன் இந்த போட்டியில் பதக்கம் வென்றவர்கள் 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான தகுதியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

போட்டியில் ஆண்களுக்கான 109 கிலோ கிராம் எடைக்கு மேற்பட்ட பிரிவில் பங்கேற்ற உஷான் சாருக்க ஸ்னெட்ச் முறையில் 150 கிலோ கிராம் எடையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 180 கிலோ கிராம் எடையும் என மொத்தமாக 330 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கப் பதக்கத்‍தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply