சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01) அராலி மத்தி, கணவத்தை பகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இராவணா ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினரும் இராவணா ஒன்றியத்தின் தலைவருமான கந்தையா இலங்கேஷ்வரன், சமூக சேவையாளர் மா. நாகரட்ணம், நல்வழி சனசமூக நிலையத்தினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply