தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் பலி

உக்ரைன், மார்ச் 02

உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட விமான தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

6-வது நாள் போரில் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன.

கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டிடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply