திருமலை விபத்தில் சிறுவன் பலி

திருமலை, மார்ச் 02

திருகோணமலை – உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் (15வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மற்றவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply