ஏழரை மணி நேர மின்வெட்டு: நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை – கோட்டா உறுதி!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடன் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை திறைசேரி மற்றும் மத்திய வங்கி வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது.

இதேவேளை இன்று ஏழரை மணி நேரம் குறிப்பாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைக்கு இடையில் 5 மணிநேரமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரைக்கிடையில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் கடந்துள்ளதாக அதேநேரம் செயலிழந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply