கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு நாளாந்தம் 4000 லீற்றர் டீசல் தேவை

கிளிநொச்சி, மார்ச் 02

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சி ஊடா மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக எமது பேருந்து சேவைகளை உரிய முறையில் நடார்த்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். முக்கியமாக மக்களை ஏற்றியவாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதனால் அவ்வந்த நேரங்களிற்கு மக்களிற்கான சேவையை செய்ய முடியாதுள்ளது.

இந்த நிலை தொடர்ந்து அடுத்த வாரமும் இருக்குமாயின் எமது சேவையை மட்டுப்படுத்தி செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி பாடசாலைகைள் ஆரம்பிக்கப்பட இருப்பதால், அக்காலப்பகுதியில் எங்களால் வழமைபோன் முன்னெடுக்கப்படுகின்ற பாடசாலை சேவைகைளையும் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேரில் சென்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளோம். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் அடித்தட்டு மக்கள் அதிகமாக வாழ்கின்ற மாவட்டம். தனிப்பட்ட வாகனங்களை பாவிப்பதைவிட் இவ்வாறான பொது போக்குவரத்தினையே அதிகளவான மக்கள் பாவிக்கின்றனர்.

எரிபொருளை எமது சங்கத்தின் சிபாரிசின் மூலம் அளவுத்திட்டத்திற்கு அமைவாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பொது போக்குவரத்து சேவை முழுமையாக இடம்பெறுவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உதவ வேண்டும் என நான் மீண்டும் மீண்டும் நான் இந்த ஊடக சந்திப்பின் ஊடாக கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Leave a Reply