
கொழும்பு, மார்ச் 02
ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் உரிய பதில் வழங்குவார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு அலி சப்ரி கூறியதாவது,
ஆரம்பத்தில் இருந்தே, இந்த மாநாடு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை மையமாகக் கொண்டதுள்ளது.
எனினும், ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடப்படும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் உரிய பதிலளிப்பதற்கு தயார். இருப்பினும், இந்த புகார்களின் தன்மையைப் பார்க்கும்போது, அவை எங்களை கடுமையாக பாதிக்காது.
ஜெனிவா மாநாட்டு அதிகாரிகள் இன்று இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள நிலைமையை உணர்ந்துள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர்ச் சூழல் இன்று பெரிய தலைப்பாக மாறியிருப்பதே காரணம் என அவர் கூறினார்.





