
கொழும்பு, மார்ச் 02
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எரிபொருளை நிரப்புவதற்காக, வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே, இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒருகொடவத்தை, ஹோர்டன் பிளேஸ், பம்பலபிட்டி, கொம்பனிதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.





