வவுனியாவில் நெற்செய்கையாளர்கள் எரிபொருள் இன்மையினால் விதைத்த நெல்லை அறுவடை செய்ய முடியாது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பெரும்போக நெற்செய்கை யானது வவுனியா மாவட்டத்தில் 22000 ஹெக்டேயரில் மேற்கொள்ளப்பட்டதுடன் அறு வடையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் அறுவடையினை மேற்கொள்வதில் பெரிதும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட் களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அறுவடை இயந்திரங் களிற்கான எரிபொருட்களை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு பெறுவதாக இருந்தாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரி சையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவ்வாறு கிடைக்கும் எரிபொருட் களும் மட்டுப்படுத்தப்பட்ட அள விலேயே கிடைக்கும் நிலையே தற்போது காணப்படுகின்றது.
இதன் காரணமாக விவசாயிகள் தாங்கள் விதைத்த நெல் லினை அறுவடை செய்ய முடி யாத நிலைக்குள்ளாகியுள்ளனர். மேலும் பெரும்போக நெற் செய்கை ஆரம்பத்தில் இருந்து உரம், கிருமிநாசினிகளிற்கான தடை போன்ற காரணங்களி னால் ஏற்கனவே விளைச்சல் குறைந்த நிலையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விளைந்த கொஞ்ச நெல்லை கூட பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்ச நிலை தற்போது விவசாயி களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை 6000 ஹெக் டேயரில் சிறுபோக நெற்செய்கை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலை யில் சிறுபோக நெற்செய்கை யினை மேற்கொள்வது கேள்விக்குறியாகவே உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.







