
திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த பட்டா ரக வாகனம், பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





