சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கை‍ குறைவடையும் என எச்சரிக்கை

டீசல் இன்று கிடைக்காவிட்டால், சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கை‍ குறைவடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பேருந்துகளுக்கு தேவையான டீசல் அளவு இன்றைய தினத்துக்குள் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அச்சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

டீசல் கிடைக்காவிட்டால் பல பேருந்துகள் இயங்காது என்றும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

எனவே டீசல் வழங்கும் போது பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply