
கச்சதீவு அந்தோனியார் பெருவிழாவில் இந்திய மீனவர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் நட்பு ரீதியாக கலந்துரையாட தயாராக உள்ளேன், என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்டு மீனவர்கள் இடையே ஒரு மனகசப்பு இப்போது காணப்படுகிறது. ஆகவே நட்பு ரீதியாக முதலில் அணுக வேண்டும்.
இராஜதந்திர அணுகுமுறைகள், பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இது தவிர நாளையும் நாளை மறுதினம் இரண்டு தரப்பில் உள்ள அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. கச்சதீவு பெருவிழாவுக்கு இந்திய மீன பிரதிநிதிகள் வருவார்களாயின் அவர்களுடன் பேசுவதற்கு தயாராக உள்ளேன்.- என்றார்.





