<!–
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
விலை உயர்வு பிரச்சினைக் குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ” கிஸ்கே அச்சே டின் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியதன் மூலம் சாமானியர்களின் துன்பங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இன்று எல்.பி.ஜி, நாளை பெற்றோல்-டீசல்’ எனத் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






