மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுகின்றதா?

மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியும் நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஈடுபட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் குறித்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply