P to P தொடர்பான வழக்கு இன்றும் பொத்துவில் நீதிமன்றில் இடம்பெற்றது!
கடந்த 2021,பெப்ரவரி,03 ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிதொடர்பான பொத்துவில் திருக்கோவில் ஆகிய பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டவழக்கு இரண்டாவது தடவையாக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 2022,யூன் 27,ம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய வழக்கில்..!
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரமர, த.கலையரசன்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன்,
மட்டக்களப்பு மாநகர முதல்வர் த.சரவணபவான் ஆகியோர்கள் எதிராளியாக ஆஜரானார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.









