யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வீதி பயணங்களில் மாற்றம்

யாழ்ப்பாணம், மார்ச் 2

யாழ்.பல்கலைகழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைகழக சுற்றாடலில் போக்குவரத்து நொிசலை தடுக்க விசேட போக்குவரத்து ஒழுங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையான மூன்று தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை திருநெல்வேலிச் சந்தியில் இருந்து கொக்குவில் சந்தி நோக்கிய ஆடியபாதம் வீதியூடான பயணம் கொக்குவில் புகையிரதக் கடவை வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது.

கொக்குவில் சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தி வரை பயணிப்போர் பிறவுண் வீதி மற்றும் இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியைச் சென்றடைய மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, பரமேஸ்வரா சந்தியிலிருந்து கலட்டி சந்தி வரையான போக்குவரத்தும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது என நல்லூர் பிரதேசசபை அறிவித்துள்ளது.

Leave a Reply