ஆயுதமுனையில் பெறுமதிவாய்ந்த பொருட்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட கும்பல்

கொழும்பு மீகொட பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தி தங்க நகை உள்ளிட்ட பெறுமதிவாயந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்ற குற்றச்சாட்டில் நபரொருவரை மீகொட பொலிஸார் நேற்று (2) கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 16 கிராம் 150 மில்லிகிராம் எடையுடைய தங்கக்கட்டிகள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் 572,500 ரூபாய் பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply