
நாட்டில் 20 வருடங்களுக்கு பிறகு ஏழறை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இது உண்மையில் தீவிர நிலைமை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் தெரிவித்தார்.
எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாடு தற்போது பயங்கரமான ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற முறையில் நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கடுமையான ஒரு நிலைமையாகவே கருதுகின்றோம்.
உண்மையில் இது பாரதூரமான பிரச்சினையாகும். வரலாற்றில் என்றுமில்லாத ஒரு நெருக்கடி நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இறுதியாக 1996ஆம் ஆண்டே ஏழு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
சுமார் 20 வருடங்களுக்கு பின்பு தற்போது நாட்டில் ஏழறை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.
இது உண்மையில் பயங்கரமான நிலைமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





