கிழக்கு மாகாண ஆளுநர் பிச்சமல் விகாரைக்கு விஜயம்,புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்
திருகோணமலை – குச்சவெளி பிச்சமல் விகாரையின் புனரமைப்புப் பணிகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் குச்சவெளி விகாரைக்கு விஜயம் செய்தார்.
மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டின் கீழ், ஆளுநரின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்பொருள் பெறுமதியுடன் புதிய சுற்றுலா மேம்பாட்டு வலயமாக பிச்சமல் விகாரை பிரதேசம் புனரமைக்கப்படுகிறது.
மாகாண கட்டிடத் திணைக்களத்தின் மேற்பார்வையில் இலங்கை கடற்படையினரால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான செலவு 21 மில்லியன் ரூபா. கட்டிடக் கலைஞர் திராசா, மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹரி பிரதாப், பொது முகாமையாளர் கலாநிதி ஞானசேகரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







