
உக்ரைனில் இருந்த 32 இலங்கையர்கள், நான்கு தனித்தனி எல்லைகள் வழியாக அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகுிறது.
உக்ரைனுக்கான அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, உக்ரைனின் நடவடிக்கைகளை தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை (28) உக்ரைன் – போலந்து எல்லை வழியாக உக்ரைனில் உள்ள இரு மாணவர்கள் உட்பட தோராயமாக 40 இலங்கை பிரஜைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

