உரிய கட்டணம் செலுத்தப்பட்டு கப்பலொன்றில் இருந்து டீசல் தரையிறக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 8,000 மெற்றிக்தொன் டீசல் இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிடி தெரிவித்துள்ளார்.






