மார்ச் 03 : நாளையும் 7 ½ மணி நேர மின்வெட்டு

நாளையதினம் (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (02) போல் நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மொத்தமாக 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய – மு.ப. 8.00 – பி.ப. 1.00 மணி வரை – பி.ப. 1.00 – பி.ப. 6.00 மணி வரை முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்- பி.ப. 6.00 – பி.ப. 8.30 மணி வரை – பி.ப. 8.30 – பி.ப. 11.00 மணி வரை இரண்டாம் கட்டத்தில் 2.30 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Leave a Reply