பரந்தன் பகுதியில் பொலிஸ் காவலரன் அமைப்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பொலிஸ் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் கொலை மற்றும் ஆள் மிரட்டல் திருட்டுச் சம்பவங்கள் என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்கள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இன்று குறித்த பொலிஸ் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காவலரண் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், அப்பகுதியில் குற்ற செயல்கள் இடம்பெறாது கட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply