
நல்லூர் செல்லர் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஹெரோயினை பொதிசெய்துகொண்டிருந்த நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மாலை குறித்த வீட்டுக்கு இராணுவத்தினர் சென்றுள்ளனர்.
இதன் போது , குறித்த நபர் வீட்டில் ஹெரோயினை விற்பனைக்காக பொதிசெய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது இராணுவத்தினர் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது , குறித்த நபர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்





