
நாங்கள் சுகாதார பிரிவினர் என்ற ரீதியில் காணப்பட்ட பிரச்சனைகளை நிவர்த்தி செய்து தரும்படி போராட்டம் ஒன்று நடாத்தினோம். ஆனால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
எனவே கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் சுகாதார அமைச்சிற்கும், ஜனாதிபதியிற்கும், பிரதமரிற்கும் நமது பிரச்சினைகளை கோரி கடிதங்களை வழங்கினோம் . அதிலும் எந்தப் பதிலும் இல்லை.
எந்தப் பதிலும் இல்லாதபட்சத்தில் இறுதியாக, பெப்ரவரி 7ம் திகதி நாங்கள் நாடுமுழுவதும் வேளை நிறுத்த போராட்டம் நடாத்தினோம்.
அடுத்த மறு நாளே சுகாதார அமைச்சுடன் கலந்துரையாட எங்களுக்கு அழைப்பு வந்தது.
அங்கு கலந்துரையாட அழைத்தாலும் அங்கு சுகாதார அமைச்சரிடம் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
பிரச்சனை குறித்து தீர்வோ, போராட்டத்தை நிறுத்திவிட்டு வேளையிற்கு சமூக அளியுங்கள் என்று எந்த விடயமும் பேசவில்லை.
எனினும் எட்டாம் திகதி இவ் பேச்சுவார்த்தை முடிந்தது என்றார்.





