வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தாழமுக்கப் பிரதேசம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அதற்கு அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.

இது இன்று முதல் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Leave a Reply