மறைந்த மூத்ததலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு முல்லைத்தீவு நகரில் அஞ்சலி!

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இன்று முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான சுற்றுவட்டப்பாதையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுபிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சித் தொண்டர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

அந்தவகையில் துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப்பாதை வளாகம் கறுப்பு மற்றும், வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு,உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வுபூர்வமாக இந்த அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *