
கொழும்பு, மார்ச் 03
நாடு முழுவதும் இன்றைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





