புகையிரதத்தில் பாய்ந்து பெண் தற்கொலை

மாதம்பே, மார்ச் 03

மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரதத்தில் பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பாய்ந்து குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply