
நவாலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் வீட்டாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்துள்ளது.
நவாலி வடக்கு , திருச்சபை வீதியிலுள்ள வீடொன்றில் உள்ளவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனம் மீது பெற்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்த இளைஞன் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். கும்பலிடம் இருந்து இளைஞன் தப்பியோடிய நிலையில், இளைஞனின் தந்தை மீது கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவரே தாக்குதலில் காயமடைந்தார்.
கூக்குரல் சத்தம் கேட்டு கூடிய அயலவர்களுடன் தாக்குதல் தாரிகளில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, பிடிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.





