தேக்குமக்குற்றிகள் கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது

ஒட்டுசுட்டான் மாங்குளம் பகுதியில் தொடர்சியாக தேக்கு மரங்கள் சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாங்குளம் வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தேக்கு மரங்களை அறுத்து பார ஊர்த்தியில் கொண்டுடிசெல்ல ஆயத்தமான நிலையில் பாரஊர்தியுடன் இருவரை கைது செய்துள்ளார்கள்.

இந்த பாரவூர்தியில் 29 தேக்கு மரக்குற்றிகள் வெட்டப்பட்டு பாரஊர்த்தியில் ஏற்றி அதற்கு மேல் எருக்கள் ஏற்றி நூதனமான முறையில் மறைந்து எடுத்து செல்லமுற்பட்டுள்ளனர் .

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஒட்டு சுட்டானில் இருந்து எரு ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவயவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply